Homeஇலங்கைஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே நாளில் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே நாளில் உயிரிழப்பு

Published on

வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர், அவரின் மகன், மகனின் மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று காலை 39 வயதுடைய கணவனும், 37 வயதுடைய மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் படுக்கை அறையில் வாந்தி எடுத்த நிலையில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.

அந்த அறையில் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கிருமி நாசினிப் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்தப் போத்தல்கள் வெற்றுப் போத்தல்களாக இருந்துள்ளன.

இருவரும் கிருமி நாசினியைக் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி தம்பதியினர் உயிர்மாய்த்தமைக்கான காரணம் தெரியவரவில்லை.

இவ்வாறிருக்கையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் தந்தையான ஓய்வுபெற்ற ஆசிரியர் (வயது 65) இன்று மாலை அதே வீட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகன் மற்றும் மருமகள் இறந்த துயரத்தால் அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அவரின் சடலமும் குருநாகல் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மூன்று சடலங்கள் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை நாளை காலை இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் இறந்த மூவர் மாத்திரமே வசித்து வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே நாளில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this