இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று (20) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இன்று (21) முட்டைகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவுள்ளதாக அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று 15 ஆம் திகதி தீவை வந்தடைந்த முட்டைப் பங்குகளின் மாதிரிகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் எடுத்துள்ளது. அதன் அறிக்கை இன்னும் நான்கு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்தியாவிலிருந்து 5 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. பெரிய அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தலா 35 ரூபாய் என்ற விலையில் முட்டைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று STC தலைவர் கூறினார். இதற்கிடையில், முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ரூ. 44 பழுப்பு நிற முட்டை ரூ. 46 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது.