தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (14) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றும் ஏற்படக்கூடும் என்பதால் விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.