Homeஇந்தியாஒரு சமூகத்தினரை அடி பணிய வைக்க பாலியல் வன்கொடுமை: மணிப்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம்...

ஒரு சமூகத்தினரை அடி பணிய வைக்க பாலியல் வன்கொடுமை: மணிப்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் வேதனை

Published on

மணிப்பூர் சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை அடி பணிய வைக்க பாலியல் வன்கொடுமையை வன்முறை கும்பல் பயன்படுத்தியதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கடந்த மே 4ம் தேதி முதல் நடந்த குற்றங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 7ம் தேதி பிறப்பித்த உத்தரவு உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  அதில், “மணிப்பூர் சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை அடி பணிய வைக்க வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமையை பயன்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது.

இது போன்ற மோதலின் போது பெண்களுக்கு எதிரான வன்முறை, கொடூரமானது. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் வன்முறை கும்பல் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனை ஏற்று கொள்ள முடியாது,” என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த மே 3ம் தேதி வன்முறை சம்பவத்தின் போது, சூரசந்த்பூரில் குமுஜம்பா லெய்கை பகுதியில் பற்றி எரிந்த தனது வீட்டில் இருந்து தப்பி வெளியேறிய 37 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பிஜ்னுபூர் காவல் நிலையத்தில் கடந்த 9ம் தேதி தான் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, நூற்றுக்கணக்கான மீரா பைபிஸ் பெண்கள் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

மணிப்பூர் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவரது டிவிட்டர் பதிவில், “மக்களவையில் தனது 2.12 மணி நேர உரையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏன் 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார்? மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி ஏன் பேசவில்லை? மணிப்பூருக்கு எப்போது வருவீர்கள்?’’ என்று பிரதமருகு 3 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this