யாழ் நகரப் பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (15) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சந்தேக நபரை இன்றைய தினம் (16) நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.