பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று தொடர் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இன்றைய தினம் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 98 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 99 ஓட்டங்களை பெற்று ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் (2:1) என கைப்பற்றியது.
NZ 🇳🇿 . 98/10 (31.4)
W. Young 26
T.Latham 21
BAN 🇧🇩 . 99/1 (15.1)
N. Shanto 51*
A. Hague 37