test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுஒருத்தரை நீக்கியே ஆகனும்.. 2வது ஒருநாள் போட்டி.. குழம்பி நிற்கும் ரோகித் சர்மா - என்ன...

ஒருத்தரை நீக்கியே ஆகனும்.. 2வது ஒருநாள் போட்டி.. குழம்பி நிற்கும் ரோகித் சர்மா – என்ன காரணம்?

Published on

spot_img
spot_img

நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய பவுலிங் படையில் அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் ரோகித் சர்மா சிக்கியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ள 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயன் சிங் மைதானத்தில் இந்த போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11-ல் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் சர்மா தள்ளப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதும், தென்னாப்பிரிக்க அணி 337 ரன்கள் வரை விரட்டிவிட்டது. அதிகப்படியான ரன்களை வாரி வழங்கியது ஹர்திக் பாண்ட்யா தான். 7 ஓவர்களில் 70 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் அவர் இந்தியாவின் துணைக்கேப்டன் என்பதால் நீக்கப்பட வாய்ப்பில்லை.

பாண்ட்யாவுக்கு அடுத்தபடியாக பார்த்தால் ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சென்றனர். ஷர்துல் 2 விக்கெட்களை எடுத்த போதும், அவர் நிறைய ரன்களை கசியவிட்டார். முகமது ஷமியும் 10 ஓவர்களை வீசி 69 ரன்களை வாரி வழங்கினார். இவர் கடந்த சில போட்டிகளாகவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் இலங்கை தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உள்ளார். எனவே அடுத்து வரும் போட்டியில் ஷர்துல் அல்லது ஷமியை நீக்கிவிட்டு உம்ரான் மாலிக்கை சேர்த்தே தீர வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா சிக்கியிருக்கிறார்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக 300 + ரன்களை இந்திய பேட்டர்கள் குவித்து வருகிறார்கள். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் முதல் போட்டியில் சொதப்பிய போதும், 2வது போட்டியில் முழு திறமையையும் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஹர்திக் பாண்ட்யாவும் தனது பழைய அதிரடியை காட்ட தவறி வருகிறார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this