Homeஇந்தியாஒடிசா ரயில் விபத்து.. 2 மாதங்கள் ஆகியும் அடையாளம் காணப்படாத 29 பேரின் சடலங்கள்

ஒடிசா ரயில் விபத்து.. 2 மாதங்கள் ஆகியும் அடையாளம் காணப்படாத 29 பேரின் சடலங்கள்

Published on

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 29 பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலாசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நிர்ணயிக்கப்பட்ட மெயின் லைனுக்கு பதிலாக பஹானாக பாஜார் நிலையத்தின் லூப் லைனில் நுழைந்து நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலில் மோதியது.

இதில் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் மீது பெங்களூரு – ஹவுரா இடையேயான அதிவேக ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு முற்றிலும் மனித தவறே காரணம் என்று ரயில்வே துறை விசாரணையில் உறுதியாகி உள்ளது.

இதனிடையே சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 81 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டன. ஒரு சடலத்திற்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், டிஎன்ஏ சோதனை மூலம் சடலங்களை அடையாளம் காண ரயில்வேயும், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையும் முடிவு செய்தன.அதன்படி, முதல்கட்டமாக 103 பேருக்கு மரபணு சோதனை செய்ததில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட இறுதிகட்ட DNA மாதிரிகளின் முடிவுகள் விரைவில் வந்துவிடும். அதன் அடிப்படையில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும்; உரிமை கோராமல் மீதமிருக்கும், உடல்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கும்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this