Homeஇந்தியாஒடிசாவில் புதிய அனல்மின் நிலையத்தை அமைக்கிறது என்எல்சி நிர்வாகம்

ஒடிசாவில் புதிய அனல்மின் நிலையத்தை அமைக்கிறது என்எல்சி நிர்வாகம்

Published on

ஒடிசாவில் 2,400 மெகாவாட் தயாரிப்பு திறன் உள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்க என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தைத் தலைமையிடமாக கொண்ட என்எல்சி (நெய்வேலி பழுப்பு நிலக்கரி) நிறுவனம், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் வருடம் முழுக்க 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது.

என்எல்சி நிறுவனத்திற்கு நெய்வேலியில் 3 நிலக்கரி சுரங்கமும் ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சார் மற்றும் ஒடிசாவின் தலபிராவில் தலா 1 நிலக்கரி சுரங்கமும் உள்ளது.இந்த நிலையில், ஒடிசாவின் தலபிரா பகுதியில், அமைந்துள்ள சுரங்கத்திற்கு அருகே புதிய அனல் மின் நிலையம் அமைக்க என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

2,400 மெகா வாட் தயாரிப்பு திறனுடன் ரூ.19,422 கோடி முதலீட்டில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் அமைக்க உள்ளதாகவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கி 2028 -2029க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து தமிழகத்திற்கு 1,450 மெகாவாட் மின்சாரமும் புதுச்சேரிக்கு 100 மெகா வாட் மற்றும் கேரளாவிற்கு 400 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர ஒப்புதல்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this