காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றிரவு காத்தான்குடி 6ஆம் பிரிவு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை 2 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைதானவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.