ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்க தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் நகர்,டெலிகாம் வீதி, கடற்கரை வீதி,நூராணியா பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் இரவு(06) பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவரிடமிருந்து ஆறு போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.