2022 ஐபில் தொடரின் மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னிலை வகிக்கின்றன.
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை, மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் மும்பை இந்தியன்ஸ் $1.3 பில்லியனுடன் முதலிடத்திலும், சென்னை அணி $1.15 பில்லியனுடன் 2-வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.