யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100,000 மக்கள் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை,அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று(07.08.2023)தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள சுமார் 50,000 விவசாயிகளின் வாழ்வாதாரமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும்தெரிவிக்கையில்,
வறண்ட காலநிலையினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளேன்.
இதனால்,மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தனிப்பட்ட இல்லத்திற்கு விவசாயிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் மாத்தறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வில்பத்து தேசிய பூங்காவில் சிறிய நீரோடைகள் வறண்டு போவதால் விலங்குகளும் நீண்ட கால வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.உடவலவ, சந்திரிகா வெவ, மாதுரு ஓயா மற்றும் கலவெர உள்ளிட்ட முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றிப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.