ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிருலப்பனை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் மத தலமொன்றை சேர்ந்த 63 வயதான பாதிரியார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரான பாதிரியாரால் 2020 முதல் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 5 சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.