ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, ஐதராபாத் விமான நிலையம் திடீரென பரபரப்பானது.
குறித்த விமானம் தெலங்கானா மாநிலம் – ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து நேற்றைய தினம் சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த வேளையில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து அந்த விமானத்தை சோதனை செய்தனர்.
இருப்பினும், வெடிகுண்டு தொடர்பான சந்தேகத்துக்குரிய பொருள் ஏதும் இல்லாததால், வெடிகுண்டு புரளி என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமதமாக குறித்த விமானம் சென்னையை நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.