மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என வானிலை அவதான திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்ட திணைக்களம், தீவில் தென்மேற்கு பருவமழை சுறுசுறுப்பாக இருப்பதால், தீவின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்படி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.