ஏழு மாவட்டங்களிலுள்ள 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை விவசாய அமைச்சு விநியோகிக்கவுள்ளது.
யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஹம்பாந்தோட்டை விவசாயப் பூங்காவில் நடைபெற்றபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ½ ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் இந்த இலவச யூரியா உரத்தை பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அதிகாரபூர்வமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை இன்று (22) விவசாய அமைச்சுக்கு வழங்கவுள்ளன.