அமெரிக்க – சான் பிரான்சிஸ்கோ நகர் நேக்கி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்திய விமானம் என்ஜின் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்ட நிலையில் மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.