மொனராகலை – வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (21.03.2023) மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரினதும் சடலங்கள் இன்றைய தினம் (22.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தார்கள்.
அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.