தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (NFP) QR முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கூற்றுப்படி, QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க NFP தரவு பகுப்பாய்வு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.