பெண் சாபம் அவர்கள் முற்பிறவியில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவதால் தொடரும் தோஷமாகும். இந்த பெண் சாபம், தோஷமாகி பரம்பரையாகத் தொடரும்.
பெண் சாபம்:- ஜாதகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11-ம் இடங்கள் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும், கேதுவோடு சம்பந்தப்பட்டாலும், இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த பெண் சாபம், தோஷமாகி பரம்பரையாகத் தொடரும்.
இந்த வகை சாபம் அவர்கள் முற்பிறவியில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவதால் தொடரும் தோஷமாகும். லக்னம் எனும் ஒன்றாம் இடத்தோடு அதிக பெண் கிரகம் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் பெண்களை ஏமாற்றிய குற்றம் ஆகும். 5-ம் இடத்தோடு அதிக பெண் கிரகம் இணைவு பெற்றால் ஜாதகரின் தாத்தா பெண்களை ஏமாற்றிய குற்றம். 9-ம் இடத்தோடு அதிக பெண் கிரகம் சேர்க்கை பெற்றால் ஜாதகரின் தந்தை பெண்களை ஏமாற்றிய குற்றம்.
சுக்ரன் மாந்தியுடன் இணைவு
சுக்ரன் பாவகத்தாரி தோஷம் அடைதல்
சுக்ரன் நீசம், அஸ்தமனம், வக்ரம்.
சுக்ரன் பகை கிரகங்களுடன் சேர்ந்து இருப் பது
சுக்கிரன் மிகக் குறைந்த பாகையில் இருப்பது
சூரியன்-சுக்கிரன் இடைவெளி 40 டிகிரிக்கு மேல் இருப்பது.
2, 7-ல் மாந்தியுடன் சந்திரன்+சுக்ரன் சேர்க்கை
1, 7-ல் சனி
6-7-ம் அதிபதி இணைவு
மேற்சொன்ன அமைப்பை வைத்து ஜாதகத் தில் பெண் சாபத்தை அறியலாம். இவர்களுக்கு பெண்ணால் கிடைக்கக்கூடிய எந்த நன்மையும் முழுதாக கிடைக்காது.பெண்கள் என்றாலே வெறுப்பாக இருக்கும்.