எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
நில ஆக்கிரமிப்பு மற்றும் தொல்பொருளை பாதுகாக்கும் பெயரில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை கண்டித்து கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கோரப்பட்ட நிலையில் இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக முஸ்லிம், மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
மேலும் எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய நாளில் நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இதுதொடர்பிலான சந்திப்பு இடம்பெற்றது.
இதில் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தது.
இதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.