இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 900 தொகுதிகளில் பெற்றோலிய வளங்களை ஆராயும் பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்தார்.
நாட்டிற்கு முக்கிய முதலீடுகளை கொண்டு வருவதற்காக 900 கடல் பகுதிகளுக்கு ஏற்ற முதலீட்டாளர்களுக்கு இரண்டு வருட எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு உரிமங்களை வழங்க ஆணையம் தயாராகி வருகிறது.
இலங்கையில் கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு முதலீடுகளுக்கான சட்ட கட்டமைப்பை இறுதி செய்யும் ஒழுங்குமுறைகளில் அமைச்சர் விஜேசேகர கையொப்பமிட்டுள்ளதுடன், அது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.