செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்எட்டு மணி நேரம் வரை கோவிட்டை தடுக்கும் ஸ்பிரே: ஒமிக்ரோன் வைரசுக்கும் எதிராக செயல்படும் என...

எட்டு மணி நேரம் வரை கோவிட்டை தடுக்கும் ஸ்பிரே: ஒமிக்ரோன் வைரசுக்கும் எதிராக செயல்படும் என கண்டுபிடிப்பு

Published on

spot_img
spot_img

பின்லாந்து அறிவியலாளர்களால் எட்டு மணி நேரம் வரை கோவிட்டைதடுக்கும் திறன் கொண்ட, மூக்கினுள் தெளிக்கும் வகையிலான ஒரு ஸ்பிரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் சிகிச்சைகளைப் போல் இல்லாமல், இந்த ஸ்பிரே ஒமிக்ரோன் வகை கோவிட் வைரசுக்கும் எதிராகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் எளிதில் கோவிட் தொற்றும் அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த அரிய கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. பின்லாந்திலுள்ள ஹெல்சின்கி பல்கலை அறிவியலாளர்கள் இந்த ஸ்பிரேயைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

கோவிட் வைரசைப் பொருத்தவரை, அது இனப்பெருக்கம் செய்யும் இடம், அதாவது அது பெருகும் இடம், மூக்குதான். மூக்கில் பெருகி, எண்ணிக்கையில் அதிகரித்து, பின்னர் அது நுரையீரல் வரை பயணித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த உண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பிரே, மூக்கினுள் செலுத்தப்படுவதால், கோவிட் வைரஸ் மூக்கினுள் இனப்பெருக்கம் செய்வதே தடுக்கப்பட்டு விடுகிறது.

ஆகவே, முதலிலேயே வைரஸ் தடுக்கப்பட்டு விடுவதால், அது நுரையீரல் வரை சென்று மோசமான நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைகிறது. கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், இந்த ஸ்பிரே, முதன்முதலில் வுகானில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ், பீட்டா வகை வைரஸ், டெல்டா வகை வைரஸ் மட்டுமின்றி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வகை மரபணு மாற்ற வைரசுக்கும் எதிராகச் செயல்படுகிறது என்பதுதான்.

குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையில் இருப்போர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், எச்.ஐ.வி தொற்றியவர்கள் முதலான நோய் எதிர்ப்புச் சக்தியில் குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த ஸ்பிரே பெரும் வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், தடுப்பூசியை எப்படியாவது தடுக்க விரும்புவோர் இந்த ஸ்பிரேயை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம், இந்த ஸ்பிரே ஒரு தடுப்பு மருந்து அல்ல, தடுப்பூசிக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதும் அல்ல.

மாறாக, தடுப்பூசியுடன் இணைந்து செயல்படும் ஒரு கூடுதல் பாதுகாப்பு முறைதான் என்கிறார்கள் அதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த ஸ்பிரே தற்போது ஆய்வகத்தில் விலங்குகள் மீது மட்டும்தான் சோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மீது இன்னமும் சோதிக்கப்படவில்லை. ஆக, அது பயன்பாட்டுக்கு வர இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 1 - ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர்...

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

More like this

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 1 - ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) நட்சத்திரம் : திருவாதிரை காலை 5.55 வரை பின்னர்...

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...