2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, திறைசேரியால் தேவையான நிதி விடுவிக்கப்படாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தபால் வாக்குகள் மற்றும் பிற ஆவணங்கள் அச்சிடப்பட்டு இதுவரையில் ரூ. 50 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும், திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணைக்களம் திணறி வருகிறது.
அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே இது தொடர்பில் திறைசேரிக்கு எழுத்து மூலம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன், இந்த விடயத்தை விரைவில் திறைசேரிக்கு நினைவூட்டவுள்ளார்.