Homeஉலகம்உளவு பலூன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா-சீனா ஆகிய பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளன.

உளவு பலூன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா-சீனா ஆகிய பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளன.

Published on

பீஜிங், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூனை கடந்த 4-ந் தேதி அமெரிக்க ராணுவம் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. மேலும் அந்த பலூன் அமெரிக்காவின் பாதுகாப்பு தகவல்களை திருட சீனாவால் அனுப்பப்பட்ட உளவு பலூன் என அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால் சீனா அதனை மறுத்தது. இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இதுபற்றி கூறுகையில், “கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா 10 பலூன்களை பறக்கவிட்டுள்ளது. அந்த பலூன்களை நாம் பொறுப்புடன், தொழில்ரீதியாக அணுகியிருக்கிறோம்” என்றார். ஆனால் சீனாவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, சீனா மீது பதில் குற்றச்சாட்டை கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க அரசு சீனா மீது கண்காணிப்பு பலூன்களை இயக்குகிறது என்ற எந்தவொரு கூற்றும் தவறானது. இது தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்பும் சீனாவின் முயற்சி. உளவுத்துறை சேகரிப்புக்கான உயரமான கண்காணிப்பு பலூன் திட்டத்தை சீனா கொண்டுள்ளது. அந்த திட்டத்தை அமெரிக்கா உள்பட 5 கண்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் இறையாண்மையை மீற சீனா பயன்படுத்தியது” என குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this