உக்ரைன், ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என புடின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர். பிரான்ஸ் எங்களை தாக்குவதற்கு முன்கூட்டியே பிரான்சை தாக்குவோம் என புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரான்ஸ் நாடே இருக்கக்கூடாது என்றும், பிரான்சையோ அல்லது பிரித்தானியாவையோ அழிக்கும் அளவுக்கு தங்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் ஓய்வு பெற்ற ரஷ்ய தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.