செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்உலக நாடுகளை உலுக்கிய சக்தி வாய்ந்த 10 நிலநடுக்கங்கள்..

உலக நாடுகளை உலுக்கிய சக்தி வாய்ந்த 10 நிலநடுக்கங்கள்..

Published on

spot_img
spot_img

உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் 10 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் இரு நாடுகளிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 30 நாட்களில் உலகம் முழுவதும் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.அந்த வகையில் கடந்த மார்ச் 16 அன்று, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் பகுதியில் மிக சக்திவாய்ந்த 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன்,கெர்மடெக் தீவுகள் பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 23 அன்று தஜிகிஸ்தானில் 6.9 ரிக்டர் அளவும், மார்ச் 18 அன்று ஈக்வடாரில் 6.8 ரிக்டர் அளவும், மார்ச் 22 அன்று அர்ஜென்டினாவின் சான் அன்டோனியோ டி லாஸ் கோப்ரெஸ் நகரில் 6.5 ரிக்டர் அளவும், மார்ச் 21 அன்று ஆப்கானிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவும், எஸ்பிரிடு சாண்டோ தீவில் 6.5 ரிக்டர் அளவும், மார்ச் 1ல் பப்புவா நியூ கினியாவின் கிம்பேவில் 6.5 ரிக்டர் அளவும், மார்ச் 14ல் மடாங்கில் 6.3 ரிக்டர் அளவும், பிப்ரவரி 23ல் இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.0 ரிக்டர் அளவிற்கு மேல் நிலநடுக்கம் பதிவாகி அந்த பகுதிக்க சுனாமி எச்சரிக்கை விடப்படும்.

அந்த வகையில் மேற்குறிப்பிட்ட 10 இடங்களில் கடந்த 30 நாட்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி….

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு…..

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச்...

More like this