உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை விலங்கியல் பூங்காவை இன்று பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவித்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரம் இந்த இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இன்று சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.