2023 ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகளுக்கான த்குதிச் சுற்று ஆட்டங்களாக 2020-2023 ICC Cricket World Cup Super League போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இப்போட்டிகளின் முடிவில் உலக கோப்பை போட்டிகளை நடாத்தும் நாடான இந்தியாவும் 2020-2023 ICC Cricket World Cup Super League போட்டிகளின் படி புள்ளி பட்டியலில் இடம் பிடிக்கும் முதல் 7 அணிகளும் (இந்தியா நீங்கலாக) 2023 உலக கிண்ண போட்டிகளுக்கான நேரடித் தகுதியைப் பெறும். மற்றைய இரு அணிகள் உலக கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் தகுதி பெறும்.
இந்நிலையில் உலக கோப்பை போட்டிகள் நெருங்கி வருகின்ற வேளையில் 2020-2023 ICC Cricket World Cup Super League போட்டிகள் முடிவடையும் தறுவாயை நெருங்கியுள்ளது. அந்த வகையில் India, New Zealand, England, Pakistan, Australia, Bangladesh மற்றும் Afghanistan ஆகிய 7 அணிகள் நேரடியாக உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள மற்றைய இடத்திற்கு West Indies, South Africa, Sri Lanka மற்றும் Ireland அணிகள் போட்டி போடுகின்றன.
South Africa மற்றும் England அணிகளுக்கிடையிலான தொடர் முடிவில் 79 புள்ளிகளுடன் தனது வாய்ப்பை பலப்படுத்தி இருந்த South Africa மெதுவாக பந்து வீசியதன் விளைவாக குறைக்க பட்ட ஒரு புள்ளியினால் தற்போது அடுத்து வரும் நெதர்லாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பான வெற்றியை பெறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலக கிண்ண போட்டிகளுக்கான தகுதியை தீர்மானிக்கும் தொடர்களாக South Africa Vs Netherlands, New Zealand Vs Sri Lanka மற்றும் Ireland Vs Bangladesh தொடர்கள் காணப்படுகின்றன.
New Zealand Vs Sri Lanka
இத்தொடரில் இலங்கை அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் அல்லது இரு போட்டிகளில் வெற்றி பெற்று மற்றைய போட்டி சமநிலை அல்லது கைவிடப்பட்டு புள்ளிகள் பகிரப்படும் பட்சத்தில் இலங்கை அணி நேரடியாக தகுதி பெறும். மாறாக இரு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் இலங்கை அணி 97 புள்ளிகளுடன் மற்றைய இரு தொடர்களின் முடிவுகளின் படி தகுதி வாய்ப்பை பெறலாம்.
South Africa Vs Netherlands
இத்தொடரில் இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் 98 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்யும். அதன் பிரகாரம் இலங்கை அணி தகுதியை இழக்கும் பட்சத்தில் தென்னாபிரிக்க அணி தகுதி பெறலாம். எனினும் Ireland அணியும் 98 புள்ளிகளைப் பெற வாய்ப்புள்ளதால் NRR இன் படி தென்னாபிரிக்க அணியின் தகுதி அமையும்.
Ireland Vs Bangladesh
தற்சமயம் 68 புள்ளிகளுடன் இருக்கும் Ireland 3 போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் 98 புள்ளிகளுடன் தகுதி வாய்ப்பை பெறலாம். எனினும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தமது வாய்ப்பை இழக்கும் பட்சத்திலேயே இது சாத்தியமாகும்.
West Indies அணியைப் பொறுத்தவரை மற்றைய 3 அணிகளும் தகுதி பெறத் தவறும் பட்சத்தில் West Indies அணி உலக கின்னதத்துக்கான நேரடித் தகுதியைப்ப்பெறும்.