இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் மரியாதை செலுத்தப்படும்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.