கிளிநொச்சி – உருத்திரபூம் பகுதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மரண வீட்டில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டையடுத்து குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்துள்ளது.
சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த நிலையில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.