விவசாயிகளுக்கு அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சுக்கு கிடைத்த தகவலையடுத்து, உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உர விற்பனை தொடர்பான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை உரிய முறையில் ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நவீன விவசாய தொழில்நுட்ப செயலகத்தை அமைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.