அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி அதனை விற்பனை செய்த உயர்தர மாணவர்கள் இரண்டு பேர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பேரும், நீண்டகாலமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.