உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான ஏனைய 11 பாடங்களுக்கான மதிப்பீடு இன்று தொடக்கம் 32 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பூர்த்தி செய்யப்பட்ட விடைத்தாள்களை பரீட்சை திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொது ஆங்கிலம் பாடம் தொடர்பான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 100 மையங்களில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான கட்டுப்பாட்டு விடைத்தாள்களை குறிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பொதுப் பரீட்சையின் பொதுப் பரீட்சைக்குப் பின்னர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.