உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு, பரீட்சகர்களை இணைத்துக்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்க முடியுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாய விஞ்ஞானம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், வணிகக்கல்வி, பொறியியல் தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.