2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07.09.2023) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் (16.09.2023) ஆம் திகதி வரை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவிருக்கும் கடந்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் (11.09.2023) ஆம் திகதி முதல் (16.09.2023) ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.