Homeஇலங்கைஉயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.இத்தகவலை கல்வி அமைச்சர் நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர் தரப்பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடாத்தி, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம்.

அத்துடன் அடுத்த வருட (2024 ஆண்டுக்குரிய) உயர்தரப் பரீட்சை வழமை போல் நடத்தப்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட போதிலும் இறுதி முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உள்ளது என்று வலியுறுத்தினார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உடனடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுமாறு கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this