இந்த வருட உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்களுடன் இணைந்து எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய கிராமம், புதிய நாடு தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று (10) உள்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.