நம்முடைய அன்றாட உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உணவின் சுவைக்கு மிக முக்கியமானதாகும்.
பெரும்பாலாக அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. எனினும், அதனை மிக அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏனெனில் இதனை அதிகளவு சேர்க்கும் போது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. தற்போது அவை என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளும் பொழுது உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகும் ஆபத்து ஏற்படும் அத்துடன் இதய நோய்களும் வரக்கூடும்.
உப்பு அதிகமாக உட்கொள்ளும் பொழுது இதய நோய்கள் உருவாகும். உங்களுக்கு ஆரோக்கியமான இதயம் வேண்டும் என்றால், உப்பு சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு அடிக்கடி நீர்ப்போக்கு ஏற்படுகிறதா என்றால் நீங்கள் அதிகமாக உப்பு உட்கொள்ளுகிறீர்கள் என்று அர்த்தம்.
அதிக உப்பு நரம்பு மண்டலத்தையும் தசைகளின் ஆற்றலையும் தடுக்கிறது. இது உடலின் மின்னழுத்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இதனால் தசைப் பிடிப்பு, தசை வலிகள் போன்றவை ஏற்படுகின்றன.