இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பேச்சாளர் வளர்மதி மாரடைப்பால் காலமானார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (04.09.2023) உயிரிழந்துள்ளார்.அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4 கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய உந்துகணை நிகழ்வுகளின் போது வளர்மதி வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார்.இஸ்ரோ விஞ்ஞானிகள் பலராலும் பாராட்டுப்பெற்ற ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதியின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஜூலை 30 இல் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை ஏந்தி சென்ற பி.எஸ்.எல்.வி சி56 உந்துகணை நிகழ்வை கடைசியாக அவர் வர்ணனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.