மிகக்கொடூரமான வாழ்வியல் சூழலையும் ஏற்படுத்தி வரும் இந்த போர் நேற்று 11-வது நாளை எட்டியது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதால் போரை உடனடியாக நிறுத்த சர்வதேச சமூகம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
ஆனால் இருதரப்பும் அதற்கு செவிசாய்க்காமல் தாக்குதல்களை மேலும், மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது. காசா ஆஸ்பத்திரி மீதான குண்டுவீச்சில் 500 பேர் பலியாகிவிட்டனர்.