நேற்று (12) கலஹா, நீலம்ப யோகலெச்சாமி தோட்டத்தில் ஏசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய தன்னுடைய இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.இந்நிலையில், கடந்த வியாழன் இரவு கருணாநிதியின் வீட்டுக்கு வந்த அவர், திருமணமாகாத தம்பி தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை விற்றுவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் தலையிட்டு மோதலை சமரசம் செய்தபோதிலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.இரவு நேர தகராறுக்கு பின், நேற்று அதிகாலை 2 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சென்று பார்த்தவேளை காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், கருணாநிதியின் உடல் பிணமாக கிடந்தது.அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அக்கம்பக்கத்தினர் பிடித்து கலஹா காவல்துறையில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.