இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆதர்ஷ் சிங், உதய் சஹாரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 62 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஜீஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 260 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.