நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் சிறிய அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.