யாழில் இலவச வகுப்புக்களை நடத்தி வந்த, நபரொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், (புதன்கிழமை) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியுள்ளனர்.
இதன்போது 13 வயதான மாணவிகள் இருவர், தமக்கு இலவசமாகக் கல்வி கற்பிக்கும் ஒருவர், தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.