கிளிநொச்சி – பூநகரி பிராந்தியத்தில் உள்ள பொன்னாவெளிக் கிராமம் இன்று இலங்கையின் வரைபடத்தில் இருந்து காணாமால் போகப்போகிறது.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.
டோக்கியோ சீமெந்து கம்பனிக்காக, அந்த இடத்தில் இருக்கின்ற முருகைக் கற்களை 300 அடி ஆழம் வரைஒருமைல் தொலைவில் இருக்கின்ற கடலையும் பொருட்படுத்தாது, பொன்னாவெளிக் கிராமத்தை தோண்டி எடுத்து அந்தக் கிராமத்தையே கடல் ஆக்குகின்ற பெரிய கைங்கரியம் தற்போது நடைபெறுகிறது.
இது மிக மோசமான விடயம் என்பதை நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றில் அவர் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.