இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று மாலை (மார்ச் 12) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் விஜேசேகர தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் நீண்ட விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்களுக்கு இணக்கம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை தொழிற்சங்கங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தம், மின்சாரக் கட்டணங்கள், அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.