கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்திற்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (2023-09-12-09) மாலை, கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின்சார விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் பாரிய மின்வெட்டு ஏற்பட்டது.