இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்ததற்காக தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழக முதல்வர் மு.க.ஸடாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதில், இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், தமிழக அரசுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்நாட்டு மக்களுக்கு அரிசி, பால் மா, உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் குறித்தபொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசினால் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.